×

அடுத்தடுத்து முகூர்த்தங்கள் தங்கம் விற்பனை 30% அதிகரிப்பு

சேலம்: தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நகைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் விற்பனையாகிறது. தங்கத்தை பொறுத்தமட்டில் தினசரி விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு முன்பு ஒரு பவுன் ரூ.5500க்கு விற்றது. அதன்பின், தங்கம் மற்றும் வெள்ளி ஆன்லைன் வர்த்தகத்தில் கொண்டு வரப்பட்டது. பின்பு, தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கியது. 2011ம் ஆண்டு ரூ.18 ஆயிரம் என அதிகரித்தது. 2012ம் ஆண்டு ரூ.24 ஆயிரம் வரை உயர்ந்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனாவுக்கு முன்பு ரூ.28 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் என கூடியது. கொரோனாவுக்கு பின்பு ரூ.45 ஆயிரம் வரை சென்றது. அப்போது பலர் தங்கக்காசை வாங்கி குவித்தனர். இதனால் தங்கக்காசுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்பின்பு பவுன் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. கடந்த சில மாதமாக, பவுன் ரூ.44 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் என அடிக்கடி விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தற்போது தை, மாசி மாதத்தில் பத்துக்கும் மேற்பட்ட முகூர்த்தங்கள் வருகிறது. அதனால் நகைக்கடைகளில் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் நகை தேவை அதிகரிப்பால் விலை கூடியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post அடுத்தடுத்து முகூர்த்தங்கள் தங்கம் விற்பனை 30% அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...